கொரோனாவை கோமியம் குணப்படுத்தாது என்று கூறிய பத்திரிகையாளர் கைது!
கொரோனா வைரஸை குணப்படுத்த அறிவியல் அறிஞர்களும் டாக்டர்களும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் பாஜகவினர் ஒரு சிலர் கோமியம் கொரோனாவை குணப்படுத்தும் என்றும் கோமியத்தை குடித்தால் கொரோனா வராது என்றும் கூறி வருகின்றனர் இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோமியமும் சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது என மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கிஷோர் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். இதனை அடுத்து அவர் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளார்கள். இந்த புகாரின் அடிப்படையில் பத்திரிகையாளர் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவை கோமியம் குணப்படுத்தும் என்று எந்தவித ஆராய்ச்சியும் இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில் அதனை தெரிவித்த ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கு சக பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.