1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (14:57 IST)

மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு.. பயங்கரவாதிகள் தாக்குதலா?

Manipur
மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
இன்று காலை மணிப்பூரில் உள்ள கங்போபி என்ற மாவட்டத்தில் முதல்வர் பைரன்சிங் அவர்களின் பாதுகாப்பு படையினர் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இது ஒரே நேரத்தில் பலமுறை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து இம்பால் செல்லும் வழியில் முதல்வர் பைரன்சிங் அங்குள்ள ஒரு மாவட்டத்தை ஆய்வு செய்ய சென்றபோது தான் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
கடந்த சனிக்கிழமை இரண்டு காவல் சோதனை சாவடிகள், வனத்துறை அலுவலகம் மற்றும் 70 வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது முதல்வரின் பாதுகாப்பு படை வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தும்
 
Edited by Mahendran