மனுசனாடா நீ!? நாயை ஆற்றில் வீசிய வீடியோ! – ஆசாமியை தேடும் போலீஸ்!
போபால் அருகே தெரு நாய் ஒன்றை ஆற்றிற்குள் தூக்கி வீசி விடியோ எடுத்த ஆசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.
போபால் அருகே படா தலாப் என்ற பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் இரண்டு நாய்கள் நின்று கொண்டிருந்திருக்கின்றன. அப்போது அந்த வழியாக வந்த குடிகார ஆசாமி ஒருவர் அந்த நாயை வலுக்கட்டாயமாக பிடித்து பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடும் நாயை கண்டு சிரித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் விலங்குகள் ஆர்வலர்கள் இரக்க உணர்வற்ற இச்செயலை பெரிதும் கண்டித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த சியாமளா ஹில்ஸ் போலீஸார் அந்த ஆசாமியை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.