Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கணவர் இவ்வளவு கொடூரமானவரா ? அதிர்ச்சியில் மனைவி செய்த காரியம் !

Updated: புதன், 11 மார்ச் 2020 (08:34 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இல்லாதபோது இறந்தவரின் மனித விரல்களைக் கொண்டு வந்து சமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். 32 வயதாகும் இவர், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய்யின் மனைவி இரவு  வெளியே சென்றுள்ளார். அவர் திரும்பி வீட்டுக்கு வந்தபோது ஏதோ மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிருப்தியான அவர், வீட்டு சமையலறையில் சென்ற்ய் பார்த்தபோது, அங்கு தன் கணவர் மனித விரல்களை சமைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த அவர் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லியுள்ளார். போலிஸார் வருவதைத் தெரிந்துகொண்ட சஞ்சய், வீட்டின் கதவுகளைப் பூட்டிக்கொண்டுள்ளார். போலிஸர் வந்து நீண்ட போராட்டத்துக்குப் பின் அவரைக் கைது செய்துள்ளனர். சஞ்சய்க்கு அருகில் உள்ள மயானத்தில் இருந்து அவர் அந்த விரல்கள் கிடைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

தவெக எம்.எல்.ஏக்கள் மன்னர் பரம்பரை அல்ல!.. உதயநிதி Vs ஆதவ் அர்ஜுனா மோதல்!...

அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.. நெட்டிசன்களின் பதிவுகள் வைரல்..

2,500 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் .. தவெக அரசு அதிரடி அறிவிப்பு...

30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. தவெக அரசு அதிரடி...

ஒரே ஒரு நாள் அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை கிராமப்புற பள்ளிக்கு அனுப்பி பாருங்கள்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

அடுத்த கட்டுரையில்
Show comments