வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 ஏப்ரல் 2021 (15:07 IST)

மகாராஷ்டிராவில் 3 வார ஊரடங்கு தேவை… அனைத்துக் கட்சி ஆலோசனையில் முதல்வர்!

மகராஷ்டிராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலையில் 3 வார ஊரடங்கு தேவை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா இரண்டாவது அலையால் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 58,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 301 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு வார இறுதி நாட்களில் 60 சதவீதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் 3 வார ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அம்மாநில முத்ல்வர் உத்தவ் தாக்கரே அனைத்துக் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.