மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து! – மீட்பு பணிகள் தீவிரம்!
மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிடாவின் மும்பை பகுதியில் குர்லா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென நேற்று மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மக்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கட்டிடத்திற்கு சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.