வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (10:14 IST)

நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டது ஏன்? – மஹிபால் சிங் பதில்

டெல்லியில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை பொது இடத்தில் வைத்து சுட்ட நீதிபதியின் பாதுகாவலர் கொலைக்கான காரணத்தை போலிஸிடம் கூறியுள்ளார்.

டெல்லியில் பணியாற்றி வரும் கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷணகாந்த் சர்மாவின் பாதுகாவலர் மஹிபால் சிங். குருகிராம் பகுதியக்கு நேற்று மதியம் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் இருவரும் கடைக்கு சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக மஹிபால் கூட சென்றுள்ளார். அப்போது அங்கு அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் நடந்துள்ளது.

அப்போது திடீரென மஹிபால் தனது துப்பாக்கியை எடுத்து நீதிபதியின் மனைவி மற்றும் மகன் இருவரையும் சரமாரியாக சுட்டார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில் நீதிபதியின் மனைவி சிகிச்சை பலனின்றி உய்ரிழந்தார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொது இடத்தில் நடந்த இந்த சம்பவத்தால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் மஹிபால் இந்த சம்பவத்துக்கான காரணத்தைக் கூறியுள்ளார். வீட்டு வேலைகளுக்கு தன்னைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் தான் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் அதனால்தான் அவர்கள் இருவரையும் சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.