புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (08:50 IST)

பள்ளி முதல்வரை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்

பெங்கலூருவில் பள்ளி முதல்வரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரு அக்ரஹாரா தாசரஹள்ளியில் ஹவனூர் என்ற சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நிறுவனரும், முதல்வருமான ரங்கநாத்(20) நேற்று மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், மாணவர்கள் முன்னிலையில் ரங்கநாத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரங்கநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவத்தை செய்த கொளையாளி ஒருவனை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார் அவனிடம் விசாரணை செய்ததில், பள்ளியின் நிலம் தொடர்பான பிரச்சனையால், ரங்கநாத்தை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.