செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (15:51 IST)

பெற்றோர்கள் சம்மதிக்காததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்

பெற்றோர்கள் தங்களின் காதலை ஏற்க மறுத்ததால், காதலர்கள் இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில், இளம் தலைமுறையினர் பலர், சிறு வயதிலே காதல் வயப்பட்டு கல்யாணம் செய்து கொண்டு குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் சின்னஞ்சிறு சண்டைகளுக்காக, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகின்றனர். காதலிக்கும் போது இருக்கும் பாசம், கல்யாணத்திற்கு பின் பலருக்கு இருப்பதில்லை. எதையுமே எளிதில் அடைய வேண்டும் என நினைத்து, தங்களின் அவசர புத்தியால் இளம் தலைமுறையினர் பலர் தங்களது வாழ்க்கையை துலைத்துவிட்டு நிற்கின்றனர். இதனாலேயே பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு சம்மதிப்பதில்லை. இதனை சற்றும் புரிந்து கொள்ளாத காதலர்கள் சில சமயம் விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
 
அதே போல்  கர்நாடகாவில் மரேஷ் (21) என்ற வாலிபரும் பாக்யாஸ்ரீ (16) என்ற மாணவியும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இருவரும் ஊரை விட்டு ஓடி சென்றனர். இந்த நிலையில் நேற்று கிராமத்தின் அருகில் உள்ள அமரேஸ்வரா கோயில் அருகில் காதலர்கள் இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.