1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 9 மார்ச் 2020 (18:55 IST)

ராணா கபூர் மற்றும் அவரது மகள்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

ராணாகபூர் மற்றும் அவரது மகள்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

யெஸ் பேங்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூர் அவரது மனைவி பிந்து, மகள்கள் ஆகியோர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் சிபிஐ நோட்டீஸ் விடுத்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள தனியார் வங்கியான யெஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்த வங்கியின் இயக்குனர் குழுவை முடக்கி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. 
 
மேலும் யெஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறையினர், வரும் 11 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வாங்கினர்.
 
எஸ் பேங்க் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல அதிகாரி ரானா கபூர், பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அவரை கைது செய்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். அதில், கடும் நிதி நெருக்கடியில் இருந்த நிறுவனங்களு அதிக அளவு கடன்களை வழங்கி அதன் மூலமாக ராணாகபூர் ஆதாயம் அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் ஆதாயமாகப் பெற்ற பணத்தை தன் மகள்கல் பெயரில் முதலீடு செய்ததுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
 
இதுகுறித்து மேலும் சில குற்றச்சாட்டை அமலாக்கத்துறையினர் கூற அதைக் கேட்டு, ராணாகபூர் கணகலங்கிவிட்டதாகவும், இதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், ராணா கபூர் ம் அவரது மனைவி பிந்து, மகள்கள் ரோஹினி, ராஹூ ராதா வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ராணா கபூர் மற்றும்  கடனுதவி நிறுவன தலைவர் வாதாவான் உள்ளிட்டோர் மீது, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.