1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 மார்ச் 2025 (08:27 IST)

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு! ராகுல்காந்தி வேண்டுகோள்!

Rahul Gandhi

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து ராகுல்காந்தி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

 

இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் வெவ்வேறு தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டினர். இதன் மூலம் போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை கண்டறிவதற்காக, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ள ராகுல்காந்தி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஏழைகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை எக்காரணம் கொண்டும் பறிபோகாத வண்ணம் கவனமாக செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K