திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (12:16 IST)

எல்.ஐ.சி. சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கு கீழ் சரிந்தது: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

LIC
எல்ஐசி சந்தை மதிப்பு ஐந்து லட்சம் கோடிக்கு மேல் சரிந்து உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எல்.ஐ.சி ஐபிஓ பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளே 4 சதவீதத்திற்கு மேல் இதன் பங்குகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
ஆனாலும் ஒரு சில நாட்களில் எல்ஐசி பங்கு மீண்டு வரும் என்று காத்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் எல்ஐசி பங்குகள் 14 ரூபாய் வரை குறைந்து 786. 20 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது
 
949 ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி பங்கின் விலை 763 ரூபாய் சரிந்து உள்ளதை அடுத்து எல்ஐசி சந்தை மதிப்பு ஐந்து லட்சம் கோடிக்கு மேல் சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்தால் ஏராளமான லாபம் கிடைக்கும் என்று முதலீடு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தான் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது