வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (14:35 IST)

காலதாமதம் ஆகின்றதா எல்.ஐ.சி. ஐபிஓ பங்குகள்?

எல்ஐசி ஐபிஓ பங்குகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த நிதி ஆண்டில் விற்பனைக்கு வர வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது 
 
எல்.ஐ.சி ஐபிஓவுக்கு அனுமதி கேட்டு செபியிடம் வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்தநிலையில் 2021-22 நிதியாண்டில் எல்ஐசி ஐபிஓ சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் தீவிரம் அடைந்து வருவதால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதன் காரணமாகவே அரசு எல்.ஐ.சி ஐபிஓவை தாமதம் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் பார்க்க வேண்டும்