மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை.. அலறியடித்து ஓட்டம் பிடித்த நோயாளிகள்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் என்ற பகுதியில் மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென சிறுத்தை நடமாட்டம் இருந்ததை தூய்மை பணியாளர்கள் கவனித்ததை அடுத்து உடனடியாக அனைத்து நோயாளிகளினமும் தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவல் திறந்து நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார். ஒரு சிலர் மருத்துவமனை ஆறைகளின் கதவை மூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த வனத்துறை சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மருத்துவமனைக்குள் சிறுத்தை எப்படி புகுந்தது என்பதை குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Edited by Mahendran