வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (11:17 IST)

அறுவை சிகிச்சை கத்தியை வெறும் கையால் கழுவிய சிறுவன்! – அரசு மருத்துவமனை செயலால் அதிர்ச்சி!

Boy
இரத்தம், சதை படிந்த அறுவைசிகிச்சை கத்தரி மற்றும் அறுவைசிகிச்சை உபகரணங்களை சிறுவன் கையால் கழுவச் செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம்.!


 
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று சொல்லப்படும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களோ, செவிலியர்களோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை மாறாக பயிற்சி மருத்துவர்கள், மருத்துக்கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

மருத்துவ மனைகளில் செவிலியர்கள் என்பவர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு, நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதையும், அவர்களின் காயங்களை சுத்தம் செய்து கட்டு போடுவதும் உண்டு

ஆனால், தற்போது, செவிலியர்கள் அந்த பணியை செய்வதில்லை. அவர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் டேட்டா என்டரி வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறனர். நோயாளிகளுக்கு டிரிப்ஸ் ஏற்றும் பணியினைகூட செவிலியர் பள்ளி மாணவிகள் தான் செய்கின்றனர்.

பயிற்சி என்பது அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் செய்யும் வேலையை பார்த்து, பயிற்சி எடுக்கும் மருத்துவர்கள், செவிலியர் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்,பயிற்சி மருத்துவர்களும், மருத்துக்கல்லூரி மாணவர்களும், செவிலியர் பள்ளி மாணவிகளும்தான் மருத்துவம் பார்க்கின்றனர்.

மருத்துவர்கள் விசிட் என்கிற பெயரில் பார்வையிட்டு செல்கின்றனர். அரசு மருத்துமனை என்பது ஏழைஎளிய மக்களை வைத்து பயிற்சி எடுத்துக் கொள்ளும் புராஜக்ட் களமாகவே செயல்பட்டு வருவது கண்டு மிகவும் வேதனையயாக உள்ளது

அதில் ஒரு சம்பவம்தான், நோயாளிகளின் காயங்களை சுத்தம் செய்து கட்டுப்போடும் பயிற்சி மருத்துவர்கள், அந்த நோயாளிகளுக்கு பயன்படுத்திய இரத்தம், சதை படிந்த கத்தரிக்கோல் மற்றும் கத்தியை அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களிடம் கொடுத்து கழுவித் தரச் சொல்வதை கண்டு அதிர்ச்சியளித்துள்ளது

அதிலும், காலில் வெட்டுப்பட்டு சிகிச்சைக்காக வந்த ஒரு நடுத்தர வயது ஆணின் காயத்தை சுத்தம் செய்த இரத்தம், சதை படிந்த கத்திரிக்கோல் மற்றம் கத்தியை அவரின் மகன் (சுமார் 12 வயது இருக்கும்) கழுவுவதை பார்த்தால் கண் கலங்க வைக்கிறது. கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் சுமார் 3 மணிநேரம் தூத்துக்குடி மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

கலெக்டராக ஆய்வுக்கு சென்றால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பில்லை. ஒரு சாதாரண குடிமகனாக மாறுவேடத்தில்  மருத்துவமனைக்கு சென்றால் தான் அங்கு நடக்கும் உண்மை தெரியவரும். இன்னும் சொல்லப்போனால், மருத்துக்கல்லூரி மருத்துவமனை என்று உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களே இல்லை. உதாரணமாக சிறுநீரக நோய்களுக்கு இங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலைதான் நிலவுகிறது.

தமிழக அரசின் மருத்துவத்துறை நிர்வாகமும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இவ்வாறான அவலநிலையை போக்கிட உரிய ஆய்வினை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.