வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (16:35 IST)

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல்: டிவிஸ்ட் வைக்கும் குமாரசாமி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காவிரி ஆணையம் அமைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 
ஆனால், இன்னும் முறைப்படி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி ஆணையம் அமைக்கப்படவில்லை. காவிரி ஆணைய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும், கர்நாடகா அதன் உறுப்பினர்களை இன்னும் அறிவிக்காமல் உள்ளது.
 
கர்நாடக இன்னும் அதன் உறுப்பினர்களை அறிவிக்காததால் ஆணையம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால், கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை நிரம்பி தமிழ்கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் காவிரி பங்கீடு தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திக்க உள்ளார். இது குறித்து குமாரசாமி பின்வருமாரு பேசியுள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடகா நடக்கும் என கூறியுள்ளார்.
 
மேலும், காவிரி ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அதுகுறித்து கர்நாடகா ஆலோசித்து வருகிறது. ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. விரைவில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.