பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் திடீரென பதவி விலகி பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில் அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட அபஜீத் தாங்கபாத்யாய என்பவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் அளித்த பல தீர்ப்புகள் மேற்குவங்க மாநிலத்தில் பல்வேறு விவாதங்களை வழி வகுத்த நிலையில் தற்போது அவர் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்துள்ளார்
இன்று அவர் மேற்குவங்க பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது பாஜக என்னை வரவேற்ற விதம் அபாரமாக இருந்தது என்றும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன் என்றும் தெரிவித்தார்
இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அவர் தம்லுக் என்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Edited by Mahendran