புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (13:41 IST)

திருமணம் செய்து வைத்த பெண் அர்ச்சகர்கள்! – நடைமுறையை உடைத்த பெண்கள்!

கொல்கத்தாவில் திருமணம் ஒன்று மரபுகளை உடைத்து பெண் அர்ச்சகர்களை கொண்டு நடத்தப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் இந்து மத சம்பிரதாயப்படி பல்வேறு வகையான திருமணங்கள் நடைபெற்றாலும், அனைத்து திருமணங்களுக்கும் பொதுவான அம்சமாக இருப்பது அர்ச்சகர். சில சமுதாயங்களை தவிர்த்து பெரும்பாலும் பல சமுதாயங்கள் அர்ச்சகர்களை கொண்டே திருமணம் செய்யும் வழக்கம் கொண்டவை. முக்கியமாக அர்ச்சகர்கள் ஆண்களாகதான் இருப்பர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் பெண் அர்ச்சகர்கள். இந்த சம்பவம் வைரலான நிலையில் அந்த திருமணத்தை நடத்தி வைத்த 4 பெண்களும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ச்சகர்களாக இருந்து வருவதாகவும், இதுபோல பல திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.