வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (16:59 IST)

முதல்வர் போராட்டம் வெற்றி – புதுச்சேரி திரும்பினார் கிரண்பேடி !

தொடர்ந்து 4 நாட்களாக தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த புதுச்சேரி முதல்வரின் கோரிக்கைகளை ஏற்று துணைநிலை ஆளுநர் புதுச்சேரி திரும்பியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 39 கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 13ஆம் தேதி மதியம் முதல் நான்கு நாட்களாக ஆளுநர் மாளிகை எதிரில் தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார். ஆனால் அவரின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத ஆளுநர் கிரண்பேடி ராணுவப் பாதுகாப்போடு டெல்லிக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார்.

நாராயணசாமியின் இந்த தொடர் போராட்டத்திற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மற்ற கட்சியினர் எனப் பலர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் இதற்கு ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.

நாராயணசாமியின் இந்தப் போராட்டத்தைக் கேலி செய்யும் விதமாக முகநூலில் கிரண்பேடி விமர்சனம் செய்ய அது ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களின் கோபத்தையும் தூண்டியது . அதனால் மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட நாராயணசாமி மக்களைக் கட்டுபடுத்தினார்.

பாண்டிச்சேரி முழுவதும் போராட்டக்களமாக மாறியதை அடுத்து மத்திய அரசின் அறுவுறுத்தலின் படி கிரண்பேடி இப்போது தனது பயணத்தை முன்னதாகவே முடித்துக்கொண்டு பாண்டிச்சேரி திரும்பியுள்ளார்.

கடந்த 5 நாட்களாகப் புதுச்சேரியில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் நீடித்து வந்த மோதல் போக்கு இன்றோடு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.