முதல்வரே போராட்டம் செய்ததால் புதுவைக்கு வரும் மத்திய படை! பெரும் பரபரப்பு

Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (18:54 IST)
புதுவை வரலாற்றில் இல்லாத வகையில் முதலமைச்சரே கவர்னருக்கு எதிராக இன்று போராட்டம் நடத்திய நிலையில் மாநிலத்தின் பாதுகாப்பை கருதி மத்தியப்படை நாளை புதுவைக்கு வருகிறது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதுவை கவர்னர் கிரண்பேடி இடையூறாக இருப்பதாக கூறி புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின்போது கவர்னரின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகைமுன் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதாகவும், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆளுநரை கண்டித்து உருவபொம்மைகள் எரிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருகின்றது.

இந்த நிலையில் முதல்வரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மத்தியப்படையை அனுப்ப ஆளுனர் கிரண்பேடி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவரது கோரிக்கை ஏற்று புதுவைக்கு நாளை மத்தியப்படை விரைந்து வரவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :