செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (13:23 IST)

வயநாடு நிலச்சரிவுக்கு பசுக்களை கொன்றதே காரணம்.! பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு.!

BJP MLA
வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் பலியானதற்கு  பசுவதையே காரணம் எனவும் பசுக்களை கொல்வதை நிறுத்தவில்லை என்றால் மேலும் இது தொடரும் எனவும் பாஜக மூத்த தலைவர் கியான்தேவ் அஹுஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரள மாநிலம் வயநாட்டில்  கடந்த 29-ம் தேதி  அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, ராஜஸ்தானின் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ், கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து கேரளாவில் நிலச்சரிவுகள், வெள்ளம், நிலநடுக்கம் அதிகரித்துள்ளது என்று கூறினார். இதற்கெல்லாம் பசு வதைதான் காரணம் என்று தெரிவித்தார்.

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படுகிறது என்றும் ஆனால் அங்கெல்லாம் பாதிப்பு பெரிதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். வயநாட்டில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பேரழிவுக்கு பசுக்களை கொன்ற பாவம் தான் காரணம் என்றும் இனியும் கேரளா பசுக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால் நிலநடுக்கங்களும், நிலச்சரிவுகளும் தொடர்ந்து நடக்கும் என்றும் கியான்தேவ் தெரிவித்தார்.


நிலச்சரிவால் கேரள மாநிலம் ஏற்கனவே கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.