செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:03 IST)

வயநாடு நிலச்சரிவு.. தமிழர்கள் 22 பேரை காணவில்லை.. 21 பேர் உயிரிழப்பு..!

Wayanad Landslide
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இருந்து வயநாடு பகுதிக்கு வேலை நிமித்தமாக வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் வேலை நிமித்தமாக தற்காலிகமாக வயநாட்டில் வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் மாயம் என்றும், வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழர்கள் 22 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வேலைக்காக சென்றவர்களில் ஒருவரும், குடியேறியவர்களில் 129 பேரும் என மொத்தம் 130 தமிழர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் வயநாடு நிலச்சாரிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குறித்த தகவல்களை பெறுவதற்காக கேரளா அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும் இதன் மூலம் தமிழகத்தில் உள்ள உறவினர்கள் வயநாடு பகுதியில் தங்கியிருந்த தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran