வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (09:30 IST)

கொரோனாவால் கவலைக்கிடமாக இருக்கும் பெண்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி சுமார் 60 பேர்களை தாக்கி உள்ளது என்பதும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று பெங்களூரை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கியதால் பலியானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவின் வெப்பநிலைக்கு கொரோனா வைரஸ் தாக்காது என்று கூறப்பட்ட நிலையில் முதல் பலி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த 85 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் கொரோனா வைரசால் இன்னொரு உயிர்ப்பலி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால் அனைவரும் உள்ளனர் 
 
இருப்பினும் சீனா, இத்தாலி, ஈரான் போலின்றி மத்திய, மாநில அரசுகளின் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பெருமளவு இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது