1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:22 IST)

கேரளாவில் 31ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மிக அதிகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்கள் வரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று 31 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,445  என்றும் ஒரே நாளில் கொரோவால் பலியானவர்களின் எண்ணிக்கை 215 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோவால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் எண்ணிக்கை 20,271 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கேரளாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது