அடுத்த ஜூலை வரை லாக்டவுன்: 2020 - 2021-க்கான விதிமுறைகள் என்னென்ன?
கேரளாவில் அடுத்த ஆண்டு வரை லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த போது கேரளாவில் அதிகளவிலான தொற்று காணப்பட்டது. ஆனால் அம்மாநில அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,429. ஆனாலும் கேரளாவில் அடுத்த ஆண்டு வரை லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆம், கேரளா கொரோனா வைரஸ் தொற்றுநோய் கூடுதல் விதிமுறைகள் 2020 என்ற பெயரில் ஒருவருடத்துக்கான கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் பின்வருமாறு...
1.பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க்அணிய வேண்டும்.
2. வேலை செய்யும் இடங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும்.
3. வாகனப் போக்குவரத்தின்போது மாஸ்க் அணிய வேண்டும்.
4. மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை
5. பொது இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியைப் கடைபிடிக்க வேண்டும்.
6. திருமண நிகழ்வில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
7. கொரோனா பாதிப்பு இல்லாத உயிரிழப்பு நிகழ்வுகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம்.
8. கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் படி செயல்பட வேண்டும்.
9. போராட்டம், தர்ணா போன்ற செயல்பாடுகளுக்கு மாவட்ட அதிகாரிகளின் அனுமதி கட்டாயம்.
10. பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
11. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு செல்பவர்கள், கேரள அரசின் ஜக்ரதா என்ற இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
12. பெரிய கடைகளில் 20 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. சானிடைசர்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.