புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (20:53 IST)

குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் குடிதண்ணீர் நிறுத்தமா? எம்பியின் டுவிட்டால் பரபரப்பு

குடியுரிமை சட்டத்தை ஆதரித்த மக்களுக்கு குடிதண்ணீரை கேரள அரசு நீறுத்திவிட்டதாக பாஜக எம்பி ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் பாஜகவினர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் கேரளாவில் உள்ள குட்டிப்புரம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பை சட்டத்தை ஆதரித்து சமீபத்தில் பேரணி நடத்தினார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கேரள அரசு குடிநீர் பிரச்சனை நிறுத்தி விட்டதாகவும், இங்கு பாஜகவின் தொண்டர்கள் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்ததாகவும் பாஜக பெண் எம்பி சோபா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து காவல்துறையில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதம் அடைந்ததால் தண்ணீர் நிறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதை திரித்து தனது டுவிட்டரில் பொய்யான ஒரு தகவலை சோபா எம்பி பதிவு செய்துள்ளதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் எம்பி சோபா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்