விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்! விமானி சாதூர்யத்தால் தப்பிய தொழிலதிபர்!

Helicopter
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (11:30 IST)
கேரளாவில் பிரபல தொழிலதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான நிலையில் விமானியின் சாதூர்யத்தால் அனைவரும் உயிர் தப்பினர்.

அரபு அமீரகத்தை மையப்படுத்திய வணிக குழுமமான லூலூ நிறுவனத்தின் நிறுவனர் யூசுப் அலி மற்றும் அவரது குழும பணியாளர்கள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தபோது நடு வானில் ஹெலிகாப்டர் பழுதாகியுள்ளது.

இதனால் விபத்தாக விமானம் தரை நோக்கி திரும்ப இந்த பிரச்சினையை சாதுர்யமாக கையாண்ட விமானி ஹெலிகாப்டரை எர்ணாகுளம் அருகே உள்ள வயல்பரப்பில் தரையிறக்கினார். இந்த விபத்தில் நிறுவனர் யூசுப் அலி மற்றும் பணியாளர்கள் பத்திரமாக உயிர் தப்பினர்.இதில் மேலும் படிக்கவும் :