1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:59 IST)

அச்சுறுத்தலான தெரு நாய்கள்; கொல்வதற்கு முடிவு செய்த கேரளா?

Street Dogs
நாடு முழுவதும் சமீப காலமாக தெரு நாய்கள் மனிதர்களை தாக்குவது அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கொல்வதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில காலமாக நாய்கள் மக்களை கடிக்கும் சம்பவங்களும், தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் வட மாநிலங்களில் சில பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்கல் லிப்டில் செல்பவர்களை கடித்த வீடியோக்கள் வைரலாகியது.

கேரளாவில் 12 வயது சிறுமி ஒருவர் பால் பாக்கெட் வாங்க கடைக்கு சென்றபோது தெரு நாய்கள் கடித்ததில் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் கேரளாவின் கன்னூர் பகுதியில் இளைஞர்கள் இருவரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்தும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு நாய்கள் தாக்குதலை சமாளிக்க அவற்றை கொல்வது குறித்து கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெறவும் ஆலோசித்து வருவதகா கூறப்படுகிறது.