திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:20 IST)

கேரள இடைத்தேர்தல் :காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் வெற்றி

sandy-oomman wins
கேரளாவில் புதுப்பள்ளி தொகுதிக்கு   நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சான்டியின் மகன்  78,098 வாக்குகள் பெற்று, 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடந்து வருகிறது.

சமீபத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார். அவரது மறைவையடுத்து, புதுப்பள்ளி தொகுதிக்கு  சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கேரளா மட்டுமின்றி  திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்கண்ட், மேற்கு வங்காளம்,  உபி., ஆகிய மாநிலங்களிலும்  காலியாக உள்ள தொகுதிகளுக்கு  கடந்த 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 7 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியானது. அதன்படி, இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தலில் பதிவான வவாக்குகள் 10 சுற்றுகளாக எண்ணப்பட்டன. கேரளா மாநிலத்தில், காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் வெற்றி பெற்றார்.

இவர், மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் ஆவார். இவர், 78,098 வாக்குகள் பெற்று, 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆளும் சிபிஎம் கட்சி 2 வது இடமும், பாஜக 6447 வாக்குகள் பெற்று வது இடமும்,  பெற்றுள்ளன. இத்தொகுதி 50 ஆண்டுகளாக இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று  வரும் நிலையில், இந்த வெற்றியையும் தக்கவைத்துள்ளது.