கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு..! டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை காவல் நீடித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. அவரை இன்று வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரப்பட்டது.
ஆனால் டெல்லி நீதிமன்றம் நான்கு நாட்கள் அனுமதி வழங்கி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை காவல் நீடித்து உத்தரவிட்டுள்ளது.