1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (10:58 IST)

மோடி தியானம் செய்த குகையின் வாடகை எவ்வளவு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி விடிய விடிய தியானம் செய்த குகையின் வாடகை மற்றும் வசதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
மோடி சமீபத்தில் கேதாரிநாத் சென்று புனித குகையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் விடிய விடிய தியானம் செய்தார் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த குகையின் வாடகை மற்றும் வசதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் (Garhwal Mandal Vikas Nigam) இணையதளத்தின் தகவலின்படி, இது கேதார்நாத் கோயிலுக்கு 1 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு நவீன தியான குகையாகும். கடந்த ஆண்டு உத்திரகண்ட் அரசு இதை யாத்ரீகர்களின் பயன்பாட்டிற்கு வழங்கியது. 
முதலில் ரூ.3000 ஆக இருந்த குகையின் வாடகை பின்னர் ரூ.990 என்று விலை குறைக்கப்பட்டது. குடிநீர், சார்ஜிங் பாண்ட் உடன்  மின்சார வசதி, படுக்கை, காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு, மாலை தேநீர் மற்றும் இரவு உணவு, 24 x 7 உதவியாளர், மேலாளரை அழைக்க ஒரு தொலைபேசி ஆகிய வசதிகள் உள்ளது.
 
மேலும் இந்த குகைக்கு சென்று தியானம் செய்ய 3 நாட்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். மன மற்றும் உடல் ரீதியான மருத்துவ சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.