திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 மே 2019 (14:20 IST)

எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு - பாஜக கூட்டணித் தலைவர்களுக்கு அமித் ஷா விருந்து !

எக்ஸிட் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதால் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 

தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதால் அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். இதனையடுத்து இதைக் கொண்டாடும் விதமாக பாஜக தலைவர் அமித்ஷா தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தனது வீட்டில் விருந்தளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.