ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது ? – தேர்தல் ஆணையம் தீவிரம் !
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறலாம் எனத் தெரிகிறது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, மேலும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இப்போது ஆளுநரின் ஆட்சியில் இருக்கும் ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது நடத்தப்படும் என கேள்விகள் எழுந்தன.
நேற்று டெல்லியில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக திடீர் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மறுசீரமைப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம் காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகளை வரையறுக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதனடிப்படையில் காஷ்மீர் முன்பு இருந்ததை விட 7 சட்டமன்றத் தொகுதிகள் அதிகமாக இருக்கும். இந்த பணிகள் எல்லாம் முடிந்து காஷ்மீரில் தேர்தல் நடக்க அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.