கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 41 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,400 என்றும் ஒரு நாளில் கொரோனாவால் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 53,093 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 52 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 3,50,742 என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது