செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 மே 2023 (16:35 IST)

மின் ஊழியருக்கு அடி உதை.. நடத்துனர்களுடன் வாக்குவாதம்.. வாக்குறுதிகளால் கர்நாடகத்தில் பரபரப்பு..!

கர்நாடக மாநிலத்தில் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்த நிலையில் தற்போது பொதுமக்கள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட்ட நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் மின் ஊழியர்கள் மின் கணக்கெடுப்புக்கு வந்த போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் கிடையாது என்று வாக்குவாதம் செய்த பொதுமக்கள் மின் கணக்கீடு செய்ய வந்த மின் ஊழியரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
அதேபோல் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் பயணச்சீட்டை பணம் கொடுத்து வாங்க மறுத்து நடத்துனர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் 
 
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து சில தினங்களே ஆகி உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva