13 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை தலைமறைவு! – போலீஸ் வலைவீச்சு!
கர்நாடகாவில் தனது 13 வயது மகளை தந்தையே வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாவட்டம் கல்புர்கி மாவட்டத்தின் ஜீவர்கி பகுதியை சேர்ந்த தம்பதியர் ஒருவருக்கு 13 வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். அந்த சிறுமி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். பெற்றோர் இருவருமே கூலி தொழிலாளிகள்.
சமீபத்தில் சிறுமிக்கு அடிக்கடி வாந்தி, உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் சிறுமியை விசாரித்தபோது மேலும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. சிறுமியின் தாயார் வயலில் விவசாய கூலியாக வேலை செய்பவர். அவர் வேலைக்கு சென்ற பின்னர் சிறுமியின் தந்தையே அடிக்கடி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்த விவரம் தெரிய வந்ததுமே உடனடியாக அந்த தாயார் சென்று இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான சிறுமியின் தந்தையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K