புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (10:50 IST)

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது - ஜெயிக்கப்போவது யார்?

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை பரபரப்புடன் தொடங்கியுள்ளது . காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 
கர்நாடகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
 
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாலும், இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே  போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 
தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.