வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 மே 2018 (14:41 IST)

மெர்சலை அடுத்து இரும்புத்திரைக்கு பப்ளிசிட்டி செய்யும் பாஜகவினர்

விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் இரும்புத்திரை படத்தில் மத்திய அரசிற்கு எதிரான வசனங்கள் இருப்பதாகக் கூறி பாஜக வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஷால் நடித்து இன்று வெளியாகி இருக்கும் இரும்புத்திரை படத்தில் சமந்தா, ஆக்சன்கிங் அர்ஜூன், மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஆதார் தகவல் திருட்டு, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், எனவே இதனை நீக்கக்கோரி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சென்னை காசி திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து பேசிய நடிகர் விஷால் இரும்புத்திரை படத்தில், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் எந்த வசனமும் இல்லை என்றும் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் படத்தை பார்க்காமல் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார். 
 
பாஜகவினர் விஜய் நடித்த மெர்சல் படத்தை பப்ளிசிட்டி  செய்ததைப் போல், இரும்புத்திரை படத்தையும் பப்ளிசிட்டி செய்ய நினைக்கிறார்கள் என பலர் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.