உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்
பெண்களை அவமரியாதை செய்யும் அரக்கன் என்றும், அவருடைய தோல்வியை நான் எதிர்பார்த்ததுதான் என்றும், உத்தவ் தாக்கரே குறித்து பாஜக எம்.பி மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில தேர்தலில் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் ஆட்சியைப் பிடிப்பார் என்றும் முதலமைச்சர் ஆவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவர் கட்சியும் கூட்டணியும் படுதோல்வி அடைந்துள்ளன.
இந்த நிலையில், "உத்தவ் தாக்கரே மோசமான தோல்வி நான் எதிர்பார்த்ததுதான். பெண்களை மதிக்கிறார்களா அல்லது அவர்களின் நலனுக்கு பாடுபடுகிறார்களா என்பதன் அடிப்படையில், ஒருவரை கடவுள் என்றும் அரக்கன் என்றும் அடையாளம் காண முடியும். அந்த வகையில், பெண்களை அவதூறு செய்யும் உத்தவ் தாக்கரே ஒரு அரக்கன்," என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "சாத்தானுக்கு நேர்ந்த அதே முடிவு தான் உத்தவ் தாக்கரேக்கு நேர்ந்துள்ளது. பெண்களை அவமதிப்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது," என்றும் அவர் கூறினார். மேலும், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும், பிரதமர் மோடி ஒரு மகத்தான தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Mahendran