ஓடவும் முடியாது: ஒளியவும் முடியாது! – வகையாய் சிக்கிய கமல்நாத்
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் சூழலில் முதலமைச்சர் கமல்நாத் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேருடன் பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 104 ஆதரவு உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் வசம் 99 தான் உள்ளது. அதேசமயம் பாஜகவிடம் 107 உறுப்பினர்கள் கைவசம் உள்ளனர்.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே முதல்வர் கமல்நாத் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.