திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (07:15 IST)

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

கடந்த சில ஆண்டுகளாக இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்புக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தொடர்ச்சியாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு விடுமுறை அறிவித்துள்ளது. 
 
ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் நீட் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது