திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து.. பொதுநல மனு தாக்கல் செய்தவரை கண்டித்த நீதிபதி..!
திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தவரை நீதிபதி கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில், சில நாட்களுக்கு முன்பு லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக கூறப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம், மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் போது, திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பொதுநல மனுவை நீதிபதிகள் கண்டித்து தள்ளுபடி செய்தனர். "30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து எப்படி வழங்க முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இவ்வகையான மனுக்களை எப்படி விசாரிக்க முடியும் எனவும் மனுதாரரை கண்டித்தனர்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva