செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (10:10 IST)

ராமநவமியன்று அசைவ உணவு?; மாணவர்களிடையே மோதல்! – ஜெ.என்.யூவில் கலவரம்!

JNU
நேற்று ராமநவமி அன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் அசைவ உணவு வழங்கியதாக வெடித்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ராமநவமி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமநவமியை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழக விடுதியில் அசைவ உணவு வழங்கக்கூடாது என ஏபிவிபி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இடதுசாரி மாணவ அமைப்புக்கும், ஏபிவிபி அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. போலீஸ் வந்து கலவரத்தை அடக்கிய நிலையில் காயம்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநவமி கொண்டாட இடதுசாரி மாணவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததே மோதலுக்கு காரணம் என ஏபிவிபி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.