செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (09:06 IST)

ராமநவமி ஊர்வலத்தில் வகுப்புவாதக் கலவரம்! கடைகள் தீக்கிரை! – குஜராத்தில் அதிர்ச்சி!

Gujarat clash
குஜராத்தில் நேற்று ராமநவமி கொண்டாடப்பட்ட நிலையில் இரு சமூகத்தினர் இடையே எழுந்த மோதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ராமநவமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமநவமியை முன்னிட்டு குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் ராமர் சிலையுடன் ஊர்வலம் சென்றனர்.

குஜராத்தின் ஹிம்மத்நகரின் அவ்வாறாக ஊர்வலம் சென்ற நிலையில் இரு சமூகத்தினரிடையே மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்ட நிலையில் அப்பகுதியில் இருந்த கடைகள், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் படை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் வன்முறையை கலைத்துள்ளனர். ஹிம்மத்நகரை தொடர்ந்து கம்பத்திலும் கலவரம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.