1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (18:26 IST)

திடீரென முடங்கிய ஜியோ சேவை: தவிக்கும் வாடிக்கையாளர்கள்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையான ஜியோ திடீரென நெட்வொர்க் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ திடீரென முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் ஜியோ பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜியோ சேவை முடங்கியது குறித்து அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்றாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை தற்காலிகமாக முடங்கி இருப்பதாகவும் விரைவில் கோளாறு சரி செய்யப்படும் என்றும் ஜியோ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஜியோ சேவை முடங்கியதால் தொலைபேசி அழைப்புகள் இணையசேவை ஆகியவற்றை பயன்படுத்துவதில் பயனாளர்கள் திண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது