1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:14 IST)

ஆண்டவரா இருந்தாலும் தப்புதான்.. ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்! – ரயில்வே அதிரடி!

Hanuman Temple
ஜார்காண்ட் மாநிலத்தில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரயில்வே துறை அனுப்பியுள்ள நோட்டீஸ் வைரலாகியுள்ளது.

ஜார்காண்ட் மாநிலம் தான்பாத் ரயில் துறைக்கு சொந்தமான நிலப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பெராக்பந்த் பகுதியில் உள்ள காதிக் சமூகத்தை சேர்ந்த மக்கள் அந்த கோவிலில் வழிபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கோவிலுக்கு குறிப்பிட்டு உரிமை யாரிடமும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கோவில் சட்டவிரோதமாக ரயில்வே இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக ரயில்வே துறை கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பெறுநர் பகுதியில் ஆஞ்சநேயர் பெயரையே குறிப்பிட்டு “சட்ட விரோதமாக இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளீர்கள். 10 நாட்களில் இங்கிருந்து வெளியேறாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ள ரயில்வே துறை, அந்த நோட்டீஸை கோவில் சுவற்றில் ஒட்டியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவிலை அகற்றக்கூடாது என அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Edited By: Prasanth.K