வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (19:11 IST)

பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து வெளிவந்த நகைகள்,.. அதிர்ந்துபோன மருத்துவர்கள்

மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணின் வயிற்றுக்குள், 1.5 கிலோ நகைகளும் நாணயங்களும் இருந்ததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேற்கு வங்கத்தின் பீர்பம் மாவட்டத்தில், ராம்நாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பல நாட்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரின் வயிற்றில் நாணயங்கள் மற்றும் சில தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதன்பிறகு அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செயவது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி, செப்பு மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட ரூ.5 மற்றும் ரூ.10 ஆகிய நாணயங்களுடன், சங்கிலி, மூக்கு வளையம், காதணி, வளையல், மற்றும் கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்டன. இவற்றின் எடை மொத்தம் 1.5 கிலோ என கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண்ணின் அம்மாவிடம் கேட்டபோது, “எனது பெண்ணிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால், கையில் எது கிடைத்தாலும் வாயில் போட்டு விழுங்கிவிடுவாள். சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த நகைகள் எல்லாம் காணாமல் போனது. அப்போது தான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் அவள் எல்லாவற்றையும் முழுங்கியதாக தெரியவந்தது” என கூறியுள்ளார்.