ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு.. கால அட்டவணை வெளியீடு.. முழு விவரங்கள் இதோ..!

Mahendran
வியாழன், 13 மார்ச் 2025 (10:10 IST)
பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கான கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 
 
நாட்டின் முக்கிய பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வு வழியாக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். ஒன்று முதன்மைத் தேர்வு இரண்டாவது பிரதானத் தேர்வு.
 
தேசிய தேர்வுகள் முகமை  ஆண்டுதோறும் ஜேஇஇ முதன்மைத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்துகிறது. 2025-26 கல்வியாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஜனவரி 22 முதல் 30 வரை நடைபெற்றது. இதில் சுமார் 12.58 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11 அன்று வெளியிடப்பட்டன.
 
இந்நிலையில், 2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு பிப்ரவரி 1 அன்று தொடங்கி 26-ம் தேதி நிறைவு பெற்றது. தற்போது, இந்த தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.
 
மாணவர்கள் இந்த தேர்வு அட்டவணையை jeemain.nta.nic.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம். மேலும், ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை www.nta.ac.in வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

விஜயை புகழ்ந்து பேசிய அமமுக எம்.ஏல்.ஏ காமராஜ் நீக்கம்!.. டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!...

என்னை முதல்வராக்கும் முயற்சி நடந்தது!.. திருமாவளவன் உண்மையை சொல்லிட்டாரே!..

பொதுமக்களுக்கு இடையூறு செய்தால்? தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை...

நீட் மறுதேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா? தேசிய தேர்வு முகமை சொல்வது என்ன?

விஜயின் ஜோசியருக்கு அரசுப்பதவி!. இட்ஸ் ராங்க் புரோ!.. கலாய்க்கும் ரசிகர்கள்!....

அடுத்த கட்டுரையில்
Show comments