ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (12:17 IST)

JEE நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்.. இன்று ஹால்டிக்கெட்! – மத்திய அரசு அறிவிப்பு!

பொறியியல் நுழைவு தேர்வான ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஐஐடி, என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் பட்டப்படிப்புகளை படிக்க மாணவர்கள் மத்திய அரசின் ஜெஇஇ (JEE – Joint Entrance Exam) என்ற நுழைவு தேர்வை எழுதி வருகின்றனர்.

ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த தேர்வின் பகுதி 1 முதன்மை நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்தது. இதன் 2ம் கட்ட நுழைவுத்தேர்வு 21ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த தேர்வுகள் ஜூலை 25ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 500 நகரங்களில் பல்வேறு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.