ரூ.650 கோடியில் பிரமாண்டமான திருமணம்: பாஜக முன்னாள் அமைச்சர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான சுரங்க நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரெட்டிக்கு சொந்தமான பெல்லாரியில் உள்ள ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் பாஜக அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி, அண்மையில் தனது மகளுக்கு 650 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.